×

தீபாவளி முடிந்த பிறகு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

சென்னை: தீபாவளி முடிந்த பிறகு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அடுத்த ஆண்டு பொதுதேர்வு குறித்த தேதி எப்போது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தீபாவளி முடிந்த பிறகு பள்ளி மாணவர்களுக்கு அரசுத் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளிவரும்.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தர்களுக்கு 40 க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கபட்டது. பள்ளி கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான கோரிக்கையை செயலி வாயிலாக பதிவு செய்யும் செயலி துவங்கப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதல்வர் போன்று பள்ளி கல்வி துறை செயலி வெளியிடபட்டது. இந்த செயலி வாயிலாக பிரச்சனைகளை எளிதாக அறியமுடியும். டெட் ஆசிரியர்களின் கோரிக்கைக்கு மாற்று வழி கண்டறிந்து கோரிக்கை தீர்க்க முயற்சிக்கப்படும்.

தீபாவளி முடிந்த பிறகு பொது தேர்வு அட்டவணை வெளியிடப்படும்.பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், மழை அதிகமாக உள்ள நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது. ஜே.இ.இ தேர்வுகள் நாடாளுமன்ற தேர்தல் இவற்றை கருத்தில் கொண்டு பொது தேர்வு தேதியை முன்னரே அறிவிக்க உள்ளோம். ஜாக்டோ ஜியோ குழு காலை பேச்சுவார்தையில் ஈட்டுபட்டு சென்றுள்ளனர். அனைத்தையும் கருத்தில் கொண்டு மாற்று யோசனை குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அரசின் மாற்று நடவடிக்கைகளை அறிவிக்க உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post தீபாவளி முடிந்த பிறகு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Diwali ,Minister Anbil Mahes ,Chennai ,Minister ,Anbil Mahes ,Minister Anpil Mahes ,
× RELATED பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக...